ஈரானில் பயணியர் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் பலி..
ஈரான் நாட்டில் பயணியர் ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஈரான் நாட்டிலுள்ள கிழக்கு பகுதியிலுள்ள தபாஸ் நகரத்தில் இருந்து, யாஸ்ட் நகரத்திற்கு ஒரு பயணியர் ரயில் சென்று கொண்டிருந்தது.
தபாஸ் நகருக்குச் சென்றபோது, ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் திடீரென்று புரண்டன. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். அதில்,80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.