புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (15:07 IST)

விண்கல் தாக்குதல்; 18 மாத இருள்: அபாயத்தில் பூமி!!

சூரிய கிரகணமானது பூமியின் குறிப்பிட்ட பகுதியை சிறிது நேரம் இருளில் ஆழ்த்தும். ஆனால், பூமி பல ஆண்டுகளுக்கு முன்னர் 18 மாதங்கள் இருளில் மூழ்கி இருந்த சம்பவமும் நடந்து உள்ளது.


 
 
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாபெரும் விண்கல் மோதலின் காரணமாக வளிமண்டலத்தில் வீசப்பட்ட துகள்கள் சுமார் 18 மாதங்கள் வரை பூமி மீது சூரிய ஒளி விழாமல் தடுத்துள்ளது.
 
இதன் விளைவாக டைனோஸர் இனமும் அழிந்தது என கூறப்படுகிறது. இதுவரை இதுதான் உலகம் கண்ட மிக மோசமான விண்கல் தாக்குதல் ஆகும். 
 
அந்த விண்கல் குறைந்தபட்சம் 10 கிமீ பரப்பளவை கொண்டதாய் இருந்தது என கூறப்படுகிறது. விஞ்ஞானிகளின் மதிப்பீட்டின்படி, டைனோஸர் இனம் உட்பட அப்போது பூமி கிரகத்தில் வாழ்ந்த 93% பாலூட்டி இனங்களையும் அந்த விண்கல் தாக்குதலால் அழித்துள்ளது என நம்பப்படுகிறது.