வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 19 ஜூன் 2017 (17:03 IST)

இன்னும் 4 நாட்களில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் 4 ஏரிகளில் கடைசி நம்பிக்கையான புழல் ஏரியும் வேகமாக வறண்டு வரும் நிலையில் சென்னையில் விரைவில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரியான வீராணம் ஏரி வறண்டு போனது. கிருஷ்ணா கால்வாய் குடிநீரும் நின்றுபோனது. இதனால் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
 
3 ஏரிகளும் வறண்டு போன நிலையில் புழல் ஏரியிலிருந்து மட்டும் தற்போது தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரியிலும் இன்னும் 4 நாட்களில் தண்ணீர் வறண்டு விடுமாம். இதனால் சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் என கூறப்படுகிறது.
 
இதையடுத்து கல்குவாரியில் தேங்கி இருக்கும் தண்ணீரை சுத்தகரித்து சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. இருந்தும் தண்ணீர் போதாத நிலையில்தான் உள்ளதாம்.