வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:00 IST)

வெடிக்கவிருக்கும் எல்லோஸ்டோன் எரிமலை: அபாயத்தை தவிர்க்க முன் ஏற்பாடுகள்!!

அமெரிக்காவில் உள்ள எல்லோஸ்டேன் எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிக்கும். தற்போது அந்த எரிமலை வெடிக்கும் அபாயத்தில் உள்ளது.


 
 
அமெரிக்காவின் வியோமிங் பகுதியில் உள்ளது எல்லோஸ்டோன் எரிமலை. இவை உலகின் அபாயகரமான 20 எரிமலைகளில் ஒன்றாகும். இது ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிக்கும்.
 
இந்த எரிமலை தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளது. இந்த எரிமலை வெடித்தால் அதில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் தீக்குழம்பு சுற்றுசூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். 
 
எனவே, நாசா விஞ்ஞானிகள் எரிமலை வெடிப்பால் ஏற்படும் ஆபத்தை தடுக்க ரூ.23 கோடி செலவில் எரிமலையை சுற்றி 10 கிமீ ஆழத்திற்கு துளையிட்டு அதில் தண்ணீர் நிரப்பி எரிமலையின் வெப்பத்தால் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.