15 கோடி பேர் ஏழைகளாகும் அபாயம்: உலக வங்கி எச்சரிக்கை!
15 கோடி பேர் வரை கொடிய வறுமைக்கு ஆளாவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,63,76,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 27,393,733 பேர் குணமடைந்துள்ளனர், கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,059,915 பேராக அதிகரிப்பு என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்தமார்ச் மாதத்தில் இருந்து பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர் ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் தொழில், வர்த்தகம் முடங்கின. பல கோடி பேர் வேலை இழப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அடுத்த ஆண்டுக்குள் உலகமெங்கும் 8.8 கோடி பேர் முதல் 15 கோடி பேர் வரை கொடிய வறுமைக்கு ஆளாவார்கள் என்று உலக வங்கி கூறுகிறது.