செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (13:25 IST)

வெனிசுலாவின் 17 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து- 16 பேர் பலி...

Bus accident
வெனிசுலாவின் தலைநகர் கராகசை இணைக்கும்  கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது.
 

வெனிசுலாவின் தலை நகர்கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் வேகமாகச்  சென்ற லாரி திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதியது.

சுமார் 17 வாகனங்கள் மோதியதில், அனைத்து வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. இதில் ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இவ்விபத்து பற்றி அறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்தக் கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் அலர் காயமடைந்தனர். 6 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளது.