வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (10:58 IST)

காசாவில் போர் நிறுத்தம்; எகிப்து தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!

Israel attack
காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என எகிப்து ஐ நா சபையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது.



இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் இதையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹமாஸ் பதுங்கு தலமான காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி, தரைவழி தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்கள் முன்பு கொண்டு வரப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தின் வாயிலாக ஹமாஸ் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைய கைதிகளும், இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன் கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் தற்போது இஸ்ரேலை சுற்றியுள்ள எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஒரு நிறுத்தத்தை கொண்டுவர தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஐ நா சபையில் இஸ்ரேல் ஹமாஸ் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என எகிப்து தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த அக்டோபரில் மனிதாபிமான அடிப்படையில் காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்ன ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் வெளியேறியிருந்தது. இந்நிலையில் தற்போது 153 நாடுகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் விரைவில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு நிறுத்தம் உருவாகும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K