Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதாக முறையில் சுவையான பிரட் சில்லி செய்ய வேண்டுமா...?

Written By Sasikala
Updated: புதன், 4 மார்ச் 2020 (16:00 IST)
குடமிளகாய் - பாதி 
பட்டர் - 25 கிராம் 
பூண்டு பற்கள் - 2
மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி 
தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி 
உப்பு - சிறிது 
கொத்தமல்லிதழை - சிறிது 
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
பெரிய வெங்காயம் - 1
செய்முறை:
 
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும். குடமிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும். பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி  வைத்துக்கொள்ளவும்.
 
அடுப்பில் கடாய் வைத்து பிரட்டை வைத்து சுற்றிலும் பட்டர் ஊற்றி பிரட்டில் தேய்த்து விடவும். பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரட்  மேலும் தேய்த்து டோஸ்ட் பண்ணிக்கொள்ளவும். பிறகு சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கொள்ளவும்.
  
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம்  பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
 
பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் கொத்தமல்லிதழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான பிரெட் சில்லி தயார்.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments