செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய !!

தேவையான பொருட்கள்: 
 
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன் 
கடலை எண்ணெய் - தேவையான அளவு 
வெந்தயம் - 1/2 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன் 
சாம்பார் வெங்காயம் - 100 கிராம் 
பூண்டு - 10 பல் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
தக்காளி - 1 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
தனியா தூள் - 3/4 ஸ்பூன் 
சீரகப்பொடி - 1/4 ஸ்பூன் 
குழம்பு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
புளி - 100 கிராம் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
 
முதலில் கடாயில் நல்லெண்ணெய் விட்டு பிறகு அதனுடன் கடலை எண்ணையை சேர்த்து நன்றாக சூடாக்கவும். அதன்பிறகு அதில் வெந்தயம் மற்றும் கடுகு போட்டு நன்றாக தாளிக்கவும். வெந்தயம் கருகாமல் இருக்கவேண்டும். 
 
பிறகு அதனுடன் சாம்பார் வெங்காயம் சேர்க்கவேண்டும். வெங்காயத்தினை பொடியாக அறியாமல் பாதியாக போடவேண்டும். பிறகு பூண்டு மற்றும் தக்காளி அறிந்து போடவேண்டும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், தனியாதூள் மற்றும் சீரகப்பொடி போட்டு நன்றாக கலக்கவும். 
 
பிறகு குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஊறவைத்த புளிக்கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு கொதித்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி எடுத்தால் சுவையான உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு தயார்.