1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
  4. How to make delicious Mysore pak...?

சுவை மிகுந்த மைசூர் பாக் செய்வது எப்படி...?

மைசூர் பாக்
தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1 கப் 
நெய் - 3 கப் 
சர்க்கரை - 2 கப் 
தண்ணீர் - 1 கப் 

செய்முறை:
 
கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும்.
 
ஒற்றைக் கம்பிப் பத்ததிற்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.
 
மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விடவேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பல நோய்களை குணப்படுத்த பயன்படும் திராட்சை விதை சாறு !!