1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : சனி, 26 மார்ச் 2022 (17:39 IST)

சுவை மிகுந்த மஷ்ரூம் பிரியாணி செய்ய !!

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம் -1 கப்
வெங்காயம் பெரியதாக - 2
தக்காளி - 1
குடை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
புதினா ஒரு கொத்து, மல்லி இலை - கைப்பிடியளவு
எலுமிச்சை - பாதியளவு
பட்டை - 1 அங்குல துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் -2
பிரியாணி இலை - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
2 கப் - பாஸ்மதி அரிசி
தண்ணீர் - 4 கப்



செய்முறை:

பாஸ்மதி அரிசி நன்றாகக் கழுவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய்யோ நெய்யோ சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போடவேண்டும்.

கிராம்பு வெடிக்கத் தொடங்கும்போது, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவேண்டும். அடுப்பினை சிம்மில் வைத்துச் செய்வது சிறந்தது. இல்லையென்றால் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டவுடன் அடிப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.

பச்சை வாடை போன வெட்டி வைத்திருந்த தக்காளியுடன் குடை மிளகாய் மற்றும் மஷ்ரூம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக கிளரிவிட்டு புதினாவைச் சேர்க்கவும். காய்கறிகள் லேசாக கலர் மாறும்போது மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்க்கவும். ஊறவைத்த பாஸ்மதி அரிசியை இதில் சேர்த்து நன்க கிளறிவிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். உப்பை வெங்காயம், தக்காளி என்று சேர்க்கும் போதே கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

அரிசி வெந்து வரும்போது மேலே கொஞ்சம் kothtமல்லி இலை மற்றும் புதினா தூவிவிட்டு பாத்திரத்தை நன்றாக மூடிவைத்து சிறிது நேரம் தம்மில் போடவும்.  அவ்வளவுதான் சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்.