1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (09:51 IST)

நாட்டுக் கோழி கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி இலவசம்… ஹோட்டல் உரிமையாளரின் வித்தியாசமான அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்ட்த்தில் உள்ள ஹோட்டலில் ஒரு கிலோ நாட்டுக் கோழி கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி இலவசமாகக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராய்லர் கோழிகளில் வரவால் நாட்டுக் கோழி மற்றும் நாட்டுக் கோழி முட்டை ஆகியவற்றுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. நாட்டு கோழி ஒரு கிலோ 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுபோல நாட்டுக் கோழி முட்டையும் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ’ஒரு நாட்டுக்கோழி கொண்டுவந்து கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி வழங்கப்படும் ‘ என அறிவித்துள்ளார்.

அதுபோல ’பச்சை மிளகாய், மாங்காய் மற்றும் முருங்கைக்காய் போன்ற நாட்டுக் காய்களைக் கொடுத்தால் அதற்கேற்ப பிரியாணி பண்டமாற்று முறையில் வழங்கப்படும்’ என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.