திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:09 IST)

நவராத்திரிக்கு சில சுண்டல் வகைகள் பற்றி பார்ப்போம்...!

Kondakadalai Sundal
1. கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள்:

கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
புதினா - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை:

கடலையை 6-8 மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேக வைக்கவும். வெந்த கடலையை தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும்.

இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால்.... மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.

2. காராமணி இனிப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்:

வெள்ளை காராமணி - ஒரு கப்
வெல்லம் - அரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்


Sundal Recipe

செய்முறை:

வெள்ளை காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.