1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 21 டிசம்பர் 2024 (16:54 IST)

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்றாலும், உடற்பயிற்சி செய்யும் போதும், உடற்பயிற்சி செய்த பின்னர் சில முக்கிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

உடற்பயிற்சி செய்யும் போது நமக்கு அதிகமான அளவில் வியர்வை வெளியேறும். எனவே, உடற்பயிற்சிக்கு பின்னர் அதிகமான தண்ணீர் நாம் உடலுக்கு தேவைப்படும். அதனால், உடற்பயிற்சி முடிந்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கு பின்னர் உடனே வேலை செய்யக்கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் தலைசுற்றல் அல்லது லேசான மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும். எனவே, சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உடற்பயிற்சி செய்த பின்னர் எடுத்துக் கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை உடற்பயிற்சி செய்தவுடன் எடுக்கக் கூடாது. தயிர் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், உடற்பயிற்சி   முடித்த பின்னர் அதிக கொழுப்புள்ள உணவுகளையும் சிற்றுண்டிகளையும் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்த பிறகு, வியர்வை காரணமாக நமது ஆடைகள் ஈரம் ஆகிவிடும். எனவே, உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர் ஆடைகளை மாற்றி விட வேண்டும். அதேபோல், உடற்பயிற்சிக்கு பின்னர் சருமத்தை உலர வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran