திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரி ஸ்பெஷல் வெண் பொங்கல் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி -1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
இஞ்சி - ஒரு துண்டு (சிறிதளவு)
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 4 டேபில்ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - தேவைக்கேப்ப
தண்ணீர் - 5 கப்.

செய்முறை:
 
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து நன்கு கழிவிய பிறகு 5 கப் தன்ணீர் மற்றும் தேவையான உப்பு தேர்த்து குக்கரில் 5 முத 6 விசில் விட்டு மசித்து (குழைத்து) கொள்ளவும். 
 
பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் உற்றி சூடான பிறகு, சீரகத்தை பொறித்து எடுத்து கொள்ளவும். பிறகு சிறிதளவு எண்ணெய் உற்றி மிளகு, முந்திரிபருப்பு மற்றும் தேவையான அளவு கறிவேப்பிலை அகியவற்றை பொறித்து எடுத்து வைத்து கொள்ளவும். 
 
பிறகு மசித்து (குழைத்து) வைத்து இருக்கும் உணவில் (பொங்கலில்) சேர்க்கவும். சிறிதளவு நெய் சேர்த்து கிளறி விட்டால் வெண் பொங்கல் தயார். இதனை சாம்பார் அல்லது தேங்காய் சட்டினி உடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.