ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (19:21 IST)

சுவை மிகுந்த இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:

இட்லி - 10
மைதா மாவு - 2 ஸ்பூன்
சோள மாவு - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப
எண்ணெய், உப்பு - தேவைகேற்ப



செய்முறை:

இட்லியை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.

பின்னர் இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து கிரேவியாக வரும் போது இதில் ஏற்கனவே பொரித்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கினால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.