அட்டகாசமான சுவையில் கோவைக்காய் வறுவல் செய்ய !!
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்)
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
சீரகத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தனியாத்தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும்.
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கலந்து வைத்துள்ள கோவைக்காயை போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
சுவையான கோவைக்காய் வறுவல் தயார். இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.