செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

அட்டகாசமான சுவையில் உளுந்து வடை செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
உளுந்தம் பருப்பு - முக்கால் கப்
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது) 
பெருங்காயம் - 3 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

செய்முறை:
 
உளுந்தை, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும்.

வழுவழுப்பான மாவாக  அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
 
பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைக்கவும். வடை மாவு கெட்டியாக இருக்கவேண்டும். கைகளில் தண்ணீர்  தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும்.
 
எண்ணெய் அளவிற்கு ஏற்றபடி 4 அல்லது 5 ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம். பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த உளுந்து வடை தயார்.