வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சுவை மிகுந்த ஓட்ஸ் இட்லி செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
ஓட்ஸ் -1 கப்
ரவை- 1 கப்
கேரட்- 2
எண்ணெய்-2 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை -10
கொத்தமல்லி இலைகள் ஒரு கையளவு
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு 10
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் 3
தயிர் 1/4 கப்
உப்பு தேவையான அளவு
பேக்கிங் சோடா 1/4 தேக்கரண்டி.
செய்முறை:
 
இரண்டு கேரட்களையும் தோல் சீவி துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி  வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் ஓட்ஸை சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்க்கவும். பின்னர் கடலைப்பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து  பொன்னிறமாக வறுக்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். துருவிய கேரட் சேர்த்து 2 முதல் 3  நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
 
மற்றொரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ரவா சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இப்பொழுது அரைத்து வைத்த  ஓட்ஸை சேர்க்கவும். மிதமான சூட்டில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸ் ரவா கலவையை சேர்த்து அதனுடன் தாளித்த கலவையை சேர்க்கவும். மேலும் பேக்கிங் சோடா தயிர்  மற்றும் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு தேவையான தண்ணீரையும் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
 
பின்னர் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி 8 முதல் 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். சுவை மிகுந்த  ஈட்ஸ் இட்லி தயார். இவை சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.