Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிப்பிளவர் சூப் செய்ய...!

Written By Sasikala
Updated: வியாழன், 14 செப்டம்பர் 2017 (18:12 IST)
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்  
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/4  ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்      
உப்பு - தேவைக்கு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
வரமிளகாய் - 5
பட்டை, இலை, மிளகு - சிறிது
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - தேவையான அளவு 
கொத்தமல்லி - தேவையான அளவு

 
செய்முறை:
 
காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து வைத்துகொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர்  அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பருப்பு ஒரு கொதி  வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும்.
 
பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு  நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
 
வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து  சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார். காரம் அதிகம்  விரும்பிகள் மிலகுத் தூளை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments