புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா செய்ய...

தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - கால் கிலோ
உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது)
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய தக்காளி - ஒன்று
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
கோதுமை மாவில் உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.
 
மாவை கொஞ்சம் எடுத்து (சிறிய கமலா ஆரஞ்சு சைஸ்) வட்டமாக இட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தடவி, காய்கறி கலவையில் 2 டீஸ்பூன் அளவு வைத்து மூடவும். மீண்டும் சிறிது கனமாக இட்டு சூடான தவாவில் போட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடவும். 
 
சுற்றிலும் எண்ணெய் தடவும். மேலேயும் ஸ்பூனால் எண்ணெய் தடவவும். வெந்ததும் எடுத்தால், மிக்ஸ்டு வெஜ் பராத்தா தயார்.