செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த தேங்காய் லட்டு செய்ய...

தேங்காய் லட்டு செய்ய உலர்ந்த தேங்காய் துருவல் மற்றும் சுண்டக் காய்ச்சிய பால் கொண்டு செய்யப்படுகிறது. இது மிகவும்  சுவையான ருசி மிகுந்த நட்ஸூடன் கூடிய நறுமணத்தை தருகிறது.
 
தேவையான பொருட்கள்:
 
உலர்ந்த வறுத்த தேங்காய் துருவல் - 2 கப்
இனிப்பான சுண்டக் காய்ச்சிய பால் (மில்க்மைடு) - 200 கிராம்
நறுக்கிய பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

 
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து சூடான பிறகு சுண்டக் காய்ச்சிய பாலை (மில்க்மைடு ஊற்றி உடனே வறுத்த தேங்காய் துருவலையும் போட்டு கலக்க வேண்டும். நன்றாக கலந்து கொண்டே கலவையானது கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கிளர வேண்டும். கடாயில் ஒட்ட விடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 
 
நன்றாக உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய பாதாம் பருப்புகளை போட்டு கிளற  வேண்டும். 4. இப்பொழுது இந்த தேங்காய் கலவையை நல்லா வட்ட வடிவ பந்து மாதிரி உருட்ட வேண்டும். 
 
இந்த பந்தை உலர்ந்த தேங்காய் துருவலில் எல்லா பக்கங்களிலும் படும்படி பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு பாதாம்  பருப்பை மேல் தூவி அலங்கரிக்க வேண்டும்.