பிரட் பக்கோடா செய்ய...
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 10
வெங்காயம் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
முந்திரிப் பருப்பு - 15 (உடைத்து கொள்ளவும்)
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (வறுத்து தோல் நீக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய்ப் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். பிரட்டை பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த பிரட், பொட்டுக் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை மிதமாக வைத்து பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். இதனை தக்காளி சாஸூடன் பரிமாறவும். மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா தயார்.