செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பய‌ன்பாடுகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 22 ஜனவரி 2020 (18:58 IST)

யூடியூப் தளத்திலிருந்து எளிதாக வீடியோவை டவுன்லோடு செய்யனுமா? இதை பண்ணுங்க..!

யூடியூப் தளத்திலிருந்து எளிதாக வீடியோவை டவுன்லோடு செய்ய என்ன செய்யவேண்டும் என பார்க்கலாம்.

யூடியூப் தளத்தில் உங்களுக்கு பிடித்த வீடியோவை டவுன்லோடு செய்வதற்கு ஆஃப்லைன் டவுன்லோடு (offline download) என்ற ஆப்ஷனை உபயோகப்படுத்தலாம். ஆனால் அதில் பதிவிறக்கப்படும் வீடியோ உங்கள் கேலரிக்குள் வராது. பிறருக்கு பகிரவும் முடியாது.

இந்நிலையில் எளிதாக உங்கள் மொபைலுக்கு எவ்வாறு யூடியூப்பிலிருந்து பதிவிறக்கலாம்? அதற்கு நாம் ”டியூப் மெட்” (tube mate) என்ற செயலியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு மொபைலாக இருந்தாலும் சரி கணிணி, அல்லது மடிக்கண்ணி ஆக இருந்தாலும் சரி இந்த செயலியை நாம் கூகுளில் “tube mate” என search box-ல் டைப் செய்து எளிதில் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். ஆண்டிராய்டு குகூள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்காது.

இன்ஸ்டால் செய்த பிறகு யூடியூப்-ல் உங்களுக்கு பிடித்தமான வீடியோவின் லிங்க்-ஐ (link) copy செய்து, ட்யூப் மெட்டில் உள்ள அடைப்பில் Paste செய்து “download” என்னும் ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும். அதன் பின்பு அந்த வீடியோவுக்கான “360p” “720p” “1080p” போன்ற resolution-கள் காட்டும். அதில் எது வேண்டுமோ அதனை கிளிக் செய்து வீடியோவை பதிவிறக்கிக் கொள்ளலாம்.

“Tube Mate” –ல் யூடியூப் மட்டுமல்லாது, Daily Motion தளத்தில் இருக்கும் வீடியோக்களையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். மேலும் இதில் வீடியோவை ஆடியோவாக மாற்றி பதிவிறக்கும் ஆப்ஷனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.