Daily Horoscope
✕

டி.கே.எஸ் இளங்கோவன் பதவி இழந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

Updated: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (07:42 IST)
திமுக அமைப்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ் இளங்கோவன் நேற்று இரவு திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற விபரத்தை திமுக தலைமை அறிவிக்காததால் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ஜான்விஜய், டி.கே.எஸ் இளங்கோவனின் மாமனார் என்றும், சமீபத்தில் ஜான்விஜய் மீது 'மீ டூ' குற்றச்சாட்டு எழுந்ததால் டி.கே.எஸ் இளங்கோவன் பதவி நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சோனியா காந்தியின் சென்னை வருகையை தலைமையின் அனுமதியின்றி அறிவிப்பு செய்ததற்காக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எனவே தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, திமுக தலைமையே என்ன காரணத்திற்காக டி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டார் என்பதை விளக்க வேண்டும் என திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

எந்த டிராப்பிலும் சிக்கிடாதீங்க!.. எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அட்வைஸ்!..

பெரியார் அறிவுலக நூலக புத்தக கொள்முதல். ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? நீதிமன்றம் கேள்வி...

நாளை முதல் மீண்டும் மழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்...

தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு உரிமை கிடையாது..உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரு.3.35 கோடி புகார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments