திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (21:52 IST)

காட்சிகளை நீக்க சம்மதித்தது ஏன்? சன் பிக்சர்ஸ் விளக்கம்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் காட்சிகளும், தமிழக அரசின் இலவச திட்டங்களை அவதூறு செய்யும் காட்சிகளும் இருப்பதாக கூறி அதிமுகவினர் நடத்திய போராட்டம் காரணமாக ஒருசில காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு சம்மதம் தெரிவித்தது. இதனால் அதிமுகவினர்களுக்கு தயாரிப்பு நிறுவனமும் படக்குழுவினர்களும் பணிந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியை  சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறை செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளூக்கு சேதம் விளைவித்தனர்.

அதனை தொடர்நது திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று திரையரங்குகளுக்கும், திரைப்படம் காண வரும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாக கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதை தெரிவித்து கொள்கிறோம்