1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: சனி, 31 ஜனவரி 2026 (14:34 IST)

விஜயை பற்றி பேச பழனிச்சாமிக்கு தகுதியில்லை!.. போட்டு பொளந்த செங்கோட்டையன்!..

eps
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விஜயை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்..
கரூரில் இவரை பார்க்கத்தானே மக்கள் கூடினார்கள்.. ஆனால் அந்த மக்கள் உயிரிழந்த போது அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லகூட விஜய் அங்கு போகவில்லை.

நாங்கள் எல்லாம் நேரில் சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் சொன்னோம். ஆனால் விஜய் அங்கு செல்லவில்லை.. மக்களை சந்திக்காமல் அது என்ன அரசியல்? விஜய் ஒரு நடிகர்தான்.. ஆனால், அரசியல்வாதி இல்லை.. எங்களுக்குத்தான் அரசியல் தெரியும். அது சாதாரண விஷயம் இல்லை’ என்று பேசியிருந்தார்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 3 நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்போது பழனிச்சாமிதான் முதல்வர். அந்த மக்களை போய் ஒரு அதிமுக அமைச்சர் கூட சந்திக்கவில்லை.. அதோடு குருவி சுடுவது போல அவர்களை சுட்டுக் கொன்றார்கள்.. அதை பார்த்து அமைதியாக இருந்தவர்தான் பழனிச்சாமி..

அதோடு தொலைக்காட்சி பார்த்துதான் அதை தெரிந்து கொண்டேன் என்று சொன்ன முதல்வர் இவர்தான்.. அதேபோல் அம்மாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் சில கொலைகள் நடந்தது.. அதை ஒருநாள் கழித்து ‘இன்று காலைதான் எனக்கு தெரியும்’ என்று சொன்னவர்தான் பழனிச்சாமி
. இப்படிப்பட்ட பழனிச்சாமிக்கு தமிழக வெற்றிகள் தலைவர் விஜய் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. இவர் எப்படி முதல்வரானார்?.. இவர் எப்படி தவழ்ந்து வந்தார் என நமக்கு தெரியும்’ என பதிலளித்திருக்கிறார்..