தனுஷ்-விஜய்சேதுபதி மோதல்: சிவகார்த்திகேயன் நிலை என்ன?

Last Modified வெள்ளி, 9 நவம்பர் 2018 (20:52 IST)
தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படமும் விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படமும் வரும் கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறை தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் சிவகார்த்திகேயனின் 'கனா' கலந்து கொள்ளுமா? என்பது இன்னும் ஓருரி நாட்களில் தெரியவரும்

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜிமோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கிய 'சீதக்காதி' திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி அதாவது 'மாரி 2' படத்திற்கு ஒருநாள் முன்னரே வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் டிசம்பர் வெளியீடு என அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படமும் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் வெளியாகவிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :