3 மாதம் காத்திருந்து பழி வாங்கிய பாம்பு
பெண் ஒருவரை கடிக்க முயன்று தப்பி ஓடிய பாம்பு 3 மாதத்துக்கு பின் காத்திருந்து கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருபுவனை அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவர் புதிதாக வீடு கட்டும் பணியில் இருந்தார். வீடு கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது கிருஷ்ணனின் மனைவி மாரியம்மாள் உடன் இருந்துள்ளார்.
அப்போது கருங்கற்கள் குவியலில் இருந்து பாம்பு ஒன்று சீறியுள்ளது. மாரியம்மாள் அலறியடித்து ஓடியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் பாம்பை விரட்டியுள்ளனர். சிறிது நேரத்தில் பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த சம்ப்வம் நடந்து 3 மாதங்கள் ஆகியுள்ளது.
இந்நிலையில் நேற்று வீடு கட்டும் வேலை தொடங்கியது. அப்போது அதே பாம்பு மாரியம்மாளை கடித்துள்ளது. உடனடியாக மாரியம்மாளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 மாதம் கழித்து பாம்பு காத்திருந்து பழி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.