வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (08:23 IST)

காரில் இளம்பெண் கற்பழிப்பு - 3 வயது குழந்தையை சாலையில் வீசி அட்டூழியம்

உத்தரபிரதேசத்தில் ஓடும் காரில் இளம்பெண்னை கற்பழித்ததோடு, பெண்ணின் 3 வயது குழந்தையை சாலையில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
வளர்ந்து வரும் கால கட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் குற்றவாளிகள் திருந்திய பாடில்லை.
 
இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
 
ஆர்.கே.மெகதா என்கிற அயோக்கியன் இளம்பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணை தன் இருப்பிடத்திற்கு வரச் சொன்னான். இதனை நம்பிய அந்த இளம் பெண், தன் 3 வயது குழந்தையுடன், மெகதாவை சந்திக்க சென்றுள்ளார். மெகதா இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தான். அதனை குடித்ததும் அப்பெண் மயங்கினார்.
பின்னர் இளம்பெண் மற்றும் அவரது குழந்தையை காரில் ஏற்றிய மெகதாவும் அவனுடைய நண்பனும், இளம்பெண்னை கற்பழித்தனர். இதற்கு இடையூறாக இருந்த குழந்தையை ஓடும் காரிலிருந்து வீசினர். காயமடைந்த குழந்தையை மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதனையடுத்து அந்த அயோக்கியன்கள், பெண்ணை காரிலிருந்து இறங்கிவிட்டு தப்பிச் சென்றனர். மயக்கம் தெளிந்த பின் அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.