1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (12:01 IST)

மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை கற்பழித்த மருத்துவமனை ஊழியர்

தெலுங்கானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவன் அடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சை பெற, அப்பெண் மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கொண்டிருந்தார். மருத்துவமனையின் வார்டு பாய், நாகராஜ் என்பவன், அப்பெண்ணிடம் மருத்துவர் அழைக்கிறார் என கூறி, பெண்ணை ஒரு அறைக்கு கூட்டிச் சென்று கற்பழித்துள்ளான். 
 
அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.