வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (14:34 IST)

சல்மான் கானுக்கு ஜாமீன் இல்லை: தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

மான்களை சுட்டு வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறைத்தண்டனை பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு இன்று ஜாமீன் வழங்கப்படவில்லை.

சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் சிலர் கடந்த 1998ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அரிய வகை கருப்பு நிற மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளாக கழித்து நேற்று தீர்ப்பு வெளியாகியது. இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும், மற்றவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்தார்.

மேலும், சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரை போலீசார் ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவருக்கு ஜாமீன் கேட்டு மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், அவரது ஜாமீன் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அந்த வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.