திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 5 ஏப்ரல் 2018 (11:13 IST)

20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சல்மான் கான் மீதான மான்வேட்டை வழக்கில் இன்று தீர்ப்பு

சல்மான் கான் உள்ளிட்டோர் மீதான மான்வேட்டை வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சல்மான் கான், சயீப் அலிகான், நடிகை தபு, சோனாலி பிந்த்ரே, நீலம், கடந்த 1998 ஆம் ஆண்டில், திரைப்பட ஷீட்டிங்கின் போது, அங்குள்ள வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இரண்டு மான்களை சுட்டுக் கொன்றதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
சல்மான்கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51–ன் கீழும், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி, பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது சட்டப் பிரிவு 149–ன் கீழும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பை ஜோத்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி தேவ் குமார் காத்ரி  வழங்க உள்ளார்.