வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 4 மே 2018 (15:50 IST)

அஜித்துக்கு எம்.ஐ.டி கல்லூரி கொடுத்த முக்கிய பதவி

அஜித்துக்கு எம்.ஐ.டி கல்லூரி கொடுத்த முக்கிய பதவி
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தல அஜித் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி எஞ்சினியரிங் கல்லூரியில் உள்ள ஏரோ மாடலிங் துறைக்கு சென்று ஏரோ மாடலிங் தொழில்நுட்பம் குறித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் அஜித்துக்கு ஒரு பெருமைக்குரிய பதவியை எம்.ஐ.டி கல்லூரி நிர்வாகம் வழங்கியது. மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லுரியின் ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் ஆளில்லா விமான அமைப்பின் ஆலோசகராக அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
அஜித்தின் ஏரோ மாடலிங் துறை குறித்த ஆர்வமே அவருக்கு இந்த பதவி கிடைக்க காரணம் என்று கூறப்படுகிறது. சினிமாவில் பெரிய நடிகரானவுடன் அடுத்தபடியாக அரசியலுக்கு சென்று கொண்டிருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் அஜித் ஆளில்லா விமான அமைப்பின் ஆலோசகராக அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது