வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (13:52 IST)

அஜித் பிறந்தநாளன்று விஜய் ரசிகர்கள் செய்த காரியம்

அஜித்தின் பிறந்தநாளன்று விஜய்ரசிகர்கள், பேனர் வைத்தும் முதியோர்களுக்கு உணவளித்தும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
பல்வேறு இன்னல்கலையும் தடைகளையும், தோல்வியையும் தாண்டி சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் தல அஜித்.
 
இந்நிலையில் கடந்த மே 1-ந் தேதி நடிகர் அஜித் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடினார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
பொதுவாக எப்பொழுதும் அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி சண்டையிடுவதைப் பற்றி தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அஜித் பிறந்தநாளன்று விஜய் ரசிகர்கள் அஜித்திற்கு  பேனர் வைத்து தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். மேலும் முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
அஜித் தான் பெரியவர், விஜய் தான் பெரியவர் என பலர் வெட்டி சண்டையில் ஈடுபட்டிருக்கும் வேளையில், விஜய் ரசிகர்கள் இப்படி செய்திருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.