Daily Horoscope
✕

ஆபத்தான கட்டத்தை தாண்டிய அதிசயம்: திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி

Updated: செவ்வாய், 31 ஜூலை 2018 (16:53 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏறபட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த காவேரி மருத்துவமனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் போராடும் குணமுள்ள கருணாநிதி, மருத்துவர்களுக்கு கொடுத்த ஒத்துழைப்பால் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதுகுறித்து திமுக தொண்டர் ஒருவர் கூறியபோது, 'கருணாநிதியைப் போலவே, அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடும், வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் இருப்பதாகவும், அவர் ஒரு அரசியல் போராளி மட்டுமின்றி உடல் உபாதைகளை எதிர்த்தும் போராடுபவர் என்றும் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் கருணாநிதிக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து மு.க. அழகிரி சில ஆலோசனைகளை, ஸ்டாலினிடம் தெரிவித்ததாகவும், அந்த ஆலோசனைகளை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே அண்ணனும், தம்பியும் நீண்ட நாட்களுக்கு பின்னர் பேசியதை பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments