திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (21:06 IST)

கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் நல்லபடியாக குணமடைந்து மீண்டு வரவேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகள் கட்சி பாகுபாடின்றி வாழ்த்தி வருகின்றனர். அதேபோல் பாஜக தலைவர்கள் உள்பட தேசிய தலைவர்களும் கருணாநிதியை நேரிலும் தொலைபேசியிலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டில் இருந்தும் கருணாநிதி நலம்பெற வேண்டும் என்று வாழ்த்து வந்துள்ளது. அவர்தான் இலங்கை அதிபர் சிறிசேனா. இலங்கை அதிபர் சிறிசேனா, கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி அந்த கடிதத்தை தனது அமைச்சர்களிடம் ஸ்டாலினிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்துள்ளார்.
 
இன்று சென்னை வந்த இலங்கை தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் எம்.பி. ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சிறிசேனா கொடுத்தனுப்பிய வாழ்த்து கடிதத்தை கொடுத்தனர். பின்னர் கருணாநிதியின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவற்றை கேட்டறிந்தனர்.