1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (22:34 IST)

நேற்றைய நிலை இன்றும் தொடர்கிறது.: கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுவாசக்கருவிகளின் உதவியின்றி சுவாசிப்பதாகவும், அவருக்கு ஏற்பட்ட உடல்நல பின்னடைவு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், அவரை சந்திக்க சென்ற தலைவர்கள் திரும்பி வந்து பேட்டியளித்தனர். இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை நேற்றைய நிலையிலேயே தொடர்கிறது என சற்றுமுன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிடும் என செய்திகள் வெளிவந்தது. ஆனால் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து இன்று எந்த அறிக்கையும் வரவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டனர்.
 
அப்போது கூறிய ஸ்டாலின், என்னை போல் தான் கருணாநிதியும் உள்ளார். அவருடைய உடல்நிலை நேற்று இருந்த நிலையே தொடர்கிறது. யாரும் அவருடைய உடல்நிலை குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கூறினார்.