வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (12:32 IST)

எந்த சாதி என்று உங்கள் "சாதி சாக்கடையில்" தேடுங்கள்- ரித்விகா ஆவேசம்!

மெட்ராஸ் மற்றும் கபாலி போன்ற படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் இடம் பிடித்த நடிகை ரித்விகா பின்னர், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 100 நாட்கள் பங்கேற்று, மக்கள் மத்தியில் ஆதரவையும் பெற்று பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றார். 
இந்நிலையில், ரித்விகா டைட்டிலை ஜெயித்த பிறகு, அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்று இணையதளங்களில் நிறைய பேர் தேடியிருக்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் ஆவேச பதிவிட்ட ரித்விகா கூறியதாவது, 
 
“ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..” என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.