புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 10 அக்டோபர் 2018 (15:10 IST)

எனக்கும் அந்த தொந்தரவு நடந்திருக்கு... விஜயலட்சுமி

அஞ்சாதே, சென்னை 28, உள்பட பல படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வைல்டுகார்டு என்ட்ரியாக  நுழைந்தவர். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தான் தான் சிறு வயதில் சந்தித்த சம்பவத்தை கூறியுள்ளார்.
விஜயலக்ஷ்மி பள்ளி பருவத்தில் கராத்தே கிளாஸ் செல்வாராம். அங்கு இருந்த மாஸ்டர் இவரிடம் தவறாக நடக்க ஆரம்பித்தாராம், அதை வீட்டுக்கு வந்து அப்பாவிடம் கூறிவிட்டாராம் விஜயலக்ஷ்மி.
 
அண்மை காலமாக  #Metoo என்ற பெயரில் பெண் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை வெளிப்படையாக ட்விட்டரில்  பேசி வருவது அதிகரித்து வருகிறது.