வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (20:32 IST)

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரித்விகா

பிக்பாஸ் சீசன் 2வில் டைட்டில் வின்னராக நடிகை ரித்விகா குறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகின்றன.
அவருக்கு பட வாய்ப்புகள் குறிவிந்து வருவதாகவும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல். அத்துடன் பிக்பாஸ் போட்டியில் கிடைத்த பரிசப் பணம் ரூ.50 லட்சத்தை சில நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக கொடுக்கவுள்ளதாகவும் சிலர் சமூக  வலைதளத்தில் கூறியிருந்தார்கள்.
 
அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ரித்விகா விளக்கம் அளித்துள்ளார். “நிறைய வதந்திகள் என்னை பற்றி வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய புதிய படம் மற்றும் பரிசு பணம் நன்கொடை அளிப்பது பற்றி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நான் எது செய்தாலும் அதை உங்களுக்கு தெரியப்படுத்துவேன். அப்படி செய்தால் அதை என் டுவிட்டர் கணக்கில் பதிவிடுவேன்” இவ்வாறு ரித்விகா கூறியுள்ளார்.