Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் தலைவரின் அறிக்கை கூட உங்களுக்கு புரியவில்லையா? திமுகவை கலாய்த்த தினகரன்

Updated: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (10:05 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கையை திமுகவை சேர்ந்தாவர்களே புரியாமல் உள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த திமுக அமைப்புச்செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், 'திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் ஜெயித்ததாக நீதிமன்ற தீர்ப்பு வந்தால், அங்கு இடைத்தேர்தலுக்கே வேலையில்லை என்றும் இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் கூட தினகரனுக்கு இல்லையா? என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தினகரன்,  5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நாடகாவுக்கும், தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன என்று திருப்பரங்குன்றத்தை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியே 'திமுக இரட்டை நிலை எடுத்தால், அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று தான் செய்தியாளர்களிடம் கூறியதாகவும், தனது கட்சி தலைவரின் அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இளங்கோவனுக்கு இல்லையா?" என்றும் தினகரன் கலாய்த்துள்ளார்.

எல்லாம் காட்டு

டெல்லியில் ஆசிரியர் தினத்தில் சிஜேபி பேரணி.. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

ஈரான்–அமெரிக்கா இடையில் மீண்டும் பதற்றம்.. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல அச்சம்..

நீங்க சொல்லிக்கொடுங்க!.. இளைஞர்கள் கேட்ட கேள்வி!.. ஷாக்கான ஜே.சி.டி பிரபாகர்!..

பெண்ணை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்!.. சேலத்தில் அதிர்ச்சி..

அரிசியில் கை வச்சா நீங்க காலி!.. சிபிஎம் சண்முகம் எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments