வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (17:58 IST)

ஆசி. கால்பந்து : அடுத்த சுற்றுக்கு தகுதியான நாடுகள் இது தான்..?

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு நாட்டின் அமீரகத்தில் நடந்து வருகிறது. தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது. 


 
இந்த நிலையில் தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113ம் நிலையில் உள்ள பக்ரைன் அணியுடன் மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், இந்தியா தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. 
 
இந்த ஆட்டம் முடிய 3 நிமிடம் இருந்த நிலையில், பெனால்டி ஷுட் வாய்ப்பில் பக்ரைன் கோல் அடித்தது. முடிவில் 1-0 என பக்ரைன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த  யுஏஇ, தாய்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தியா கடைசி இடம் பிடித்து வெளியேறியது. 
 
இன்று கிரிகிஸ்தான்-பிலிப்பைன்ஸ், தென்கொரியா-சீனா, ஈரான்-ஈராக்,  வியட்நாம்-ஓமன் அணிகள் மோதுகிறது.