ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (17:28 IST)

ஒரு பெண்ணிற்கு மிகவும் முக்கியம் இது தான்: ராய் லட்சுமி பளீச்!!

ஒரு பெண் அழகாக தெரிவதற்கு அவளது தன்நம்பிக்கையே போதும் என கூறியுள்ள நடிகை ராய் லட்சுமி ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. 
அதன்பிறகு தாம் தூம் திரைப்படம் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற படங்களில் நடித்தார். பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார். பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் படு கிளாமராக நடித்து தனது மார்க்கெட்டை தூக்கி நிலைநாட்டினார். 
 
அதனை அடுத்து சமீப காலமாக கவர்ச்சிக்கு குறைவில்லாமல் படுகவர்ச்சியாக சுற்றித்திரிவதோடு அரைகுறை நிர்வாண கவர்ச்சி புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்புகிறார்.
 
இந்நிலையில் டிவிட்டரில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, அதில் ஒரு பெண் அணியக்கூடிய அழகான பொருள் என்னெவென்றால் அது நம்பிக்கை தான் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கலவையான விமசனங்களை தெரிவித்து வருகின்றனர்.