கோவை மாணவி உயிரிழந்த விவகாரம்: பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியவர் கைது

சனி, 14 ஜூலை 2018 (08:02 IST)
கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவிக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் போலி பயிற்சியாளர் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் அவரது பயிற்சியாளர் சான்றிதழும் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து மாணவி உயிரிழப்புக்கு  காரணமான பயிற்சியாளருக்கு  போலி சான்றிதழ் தயாரிக்க  உதவிய அசோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பணம் வாங்கி கொண்டு போலியாக பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அசோக்கிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தால் இன்னும் ஆறுமுகம் போல் எத்தனை பேருக்கு அவர் போலி பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது  தெரியவரும்
 
ஆறுமுகம், அசோக் உள்பட இதுவரை இந்த விவகாரத்தில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

மெல்போர்ன் மைதானத்தில் பிரதமர் மோடி.. இளம் கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பு..

போலி கல்வி சான்றிதழ் மூலம் 3000 ஆசிரியர்கள் நியமனம்... சம்பளத்தை வட்டியோடு திரும்ப வாங்க அரசு முடிவு..

கடுமையான வெயில்!.. ஜெர்மனியில் 5120 பேர் பலி!..

கரூர் கம்பெனி ஓனர் ஓடிவிட்டார்!.. நான் ஸ்டாலினை சொல்லல!.. முதல்வர் விஜய் நக்கல்!...

கரூரில் நினைவு சின்னம்!... தாய் மாமன் திட்டம்!.. முதல்வர் விஜய் பேச்சு!...

அடுத்த கட்டுரையில்
Show comments