1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (09:22 IST)

தீவிர பிரச்சாரத்தில் குஷ்பூ !

ஆயிரம்விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் வாக்கு சேகரிப்பு.

 
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை பகுதியில் உள்ள எல்டாம்ஸ் சாலை நாட்டு முத்து தெரு பிள்ளையார் கோயில் தெரு இளங்கோ சாலை போயஸ் சாலை வீனஸ் காலணி போயஸ் கார்டன் ஸ்டெல்லா மேரிஸ் எல்லை அம்மன் காலணி முத்தையா தெருபோன்ற பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

 
வாக்கு சேகரிப்பின் போது அந்த பகுதி வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சால்வை அணிவித்து மலர் தூவி இளைஞர்கள் நடனமாடியும்  உற்சாகமாக வரவேற்றனர். வாக்கு சேகரிப்பின் போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அதிமுக பாமக நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.