திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:34 IST)

பணத்தையும் இலவசத்தையும் மட்டுமே எதிர்பார்த்தால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது! பிரச்சாரத்தில் விஜயபிரபாகரன்!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தோடு கூட்டணி வைத்துள்ளது. இதையடுத்து விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தீவிரமாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

புதுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் ‘பணத்தைக் கொடுத்து வாக்காளர்களை வாங்கிவிடலாம் என சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால் அவர்களை மக்கள் முழு லாக்டவுனில் தள்ளி விடுவார்கள். பணத்தையும், இலவசப் பொருட்களையும் மட்டுமே எதிர்பார்த்தால், கடவுளே வந்தாலும் மக்களைக் காப்பாற்ற முடியாது. எனவே மாற்றுக்கட்சியான எங்களுக்கு வாக்களியுங்கள். தலைவர் விஜயகாந்த் 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.