செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (08:41 IST)

நாளையுடன் முடியும் பிரச்சாரம்: அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

 
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. 
 
இந்நிலையில், நாளை இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.