1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (18:41 IST)

விஷாலின் ‘லத்தி’ டீசர் ரிலீஸ்!

lathi
நடிகர் விஷால் நடித்த ‘லத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது 
 
இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாயுள்ளது.
 
ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த டீசரில் விஷால் காக்கி சட்டை தோற்றத்தில் உள்ள அட்டகாசமான காட்சிகள் உள்ளன. அதற்கு முன்னர் சிவாஜிகணேசன் எம்ஜிஆர் கமல் ரஜினி விஜயகாந்த் விக்ரம் அஜித் விஜய் உள்பட பல முக்கிய நடிகர்கள் காக்கிச் சட்டையுடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன 
 
வினோத் குமார் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் ரமணா தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது