குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...
விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலை செய்து அதற்கும் சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி சீக்கிரமாகவே உச்சத்தில் தொட்டவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையே பொறாமை பட வைத்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 80 சதவீத திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு வசூலை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவரின் நடிப்பில் பராசக்தி படம் வெளியானது. 1960களில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை சுதாகொங்கரா இயக்கியிருந்தார்.
இந்த படம் ஒரு முக்கிய படமாக பார்க்கப்படாலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது குடும்பத்துடன் அவர் பொங்கலை கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்க்களில் பகிர்ந்து பொங்கல் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.